Wednesday, 30 July 2014

சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்



30-07-2014

சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சமஸ்கிருத மொழி வாரவிழா கல்லூரிகளில் கொண்டாடப்படுவதை நிறுத்தி விட்டு தாய்மொழியான தமிழ்மொழியை வாரவிழாவாக கொண்டாட வேண்டும், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை மற்றும் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் உட்பட 6 கோரிக்கைகளை வழியுறுத்தி இன்று வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்பு கல்லூரிக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். அரசு தலையிட்டு இவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யாவிட்டால் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக தெரிவித்தனர்.

பேட்டி : கனகவேல்பாண்டியன் - சட்டக்கல்லூரி மாணவன்.

https://youtu.be/x-yqxVgY1Bw